ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தில் (DRP) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் அமைப்பு நேற்று(29) மீண்டும் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தேசிய அடையாள அட்டைகளுக்காக வந்த விண்ணப்பதாரர்கள், மீண்டும் அலுவலகத்துக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மீட்டெடுக்கப்படும் வரை காத்திருக்குமாறு
இந்த அமைப்பு முதலில் மதியம் 1.00 மணியளவில் செயலிழந்தது.
பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் செயலிழந்ததாகவும், பின்னர் மாலை 4.00 மணியளவில் செயலிழந்ததாகவும், இதனால் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயலிழப்பைத் தொடர்ந்து, அமைப்பு மீட்டெடுக்கப்படும் வரை காத்திருக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
கொழும்பு மாநகரசபையின் பட்ஜெட்டை எதிர்க்க தலைக்கு 150 லட்சமா! என்பிபியிடம் கொடுக்கல் வாங்கல் டீல் இல்லை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |