கொழும்பு மாநகரசபையின் பட்ஜெட்டை எதிர்க்க தலைக்கு 150 லட்சமா! என்பிபியிடம் கொடுக்கல் வாங்கல் டீல் இல்லை
கொழும்பு மாநகரசபையின் அதிகாரத்தை கைப்பற்ற பல தரப்பினரும் மும்முரமாக செயற்பட்ட நேரத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கிடைத்தது.
தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெய்லி பல்தசார் கொழும்பு மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால் அப்போது கிடைத்த ஆதரவு தற்போது குறைந்துள்ள நிலையில், கொழும்பு மாநகரசபையின் என்பிபியின் வரவுசெலவுத்திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
அதனை தொடர்ந்து எதிர்தரப்புகள் அதனை சந்தோசமாக கொண்டாடியதை காணக்கூடியதாக இருந்தது.
இந்தநிலையில் கொழும்பு மாநகரசபை என்பது வரி மூலமாக நிதி கொட்டிக்கிடக்கும் இடம், அதற்கிணங்க பல திட்டங்களை நாம் வரவு செலவுதிட்டத்தில் முன்வைத்தும் கூட எதற்காக எதிர்த்தார்கள் என்று தெரியாது என கொழும்பு மாநகர சபையின் சுயேற்சை குழு உறுப்பினர் K.D குருசாமி தெரிவித்தார்.
லங்காசிறியிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், தேசிய மக்கள் சக்தியிடம் டீல் அரசியல் இல்லை. தேசிய மக்கள் சக்தியினர் கொடுக்கவும் மாட்டார்கள், வாங்கவும் மாட்டார்கள். பட்ஜெட்டை எதிர்க்க தலைக்கு 150 லட்சம் என்பது தொடர்பில் நான் எதையும் காணவும் இல்லை, கேள்விபடவும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..