ஆசிரியர்களை வீதியில் இறக்கிப் போராடப் போவதாக எச்சரிக்கை
ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வீதியில் இறக்கி போராடப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடுகளை களைவதற்காக எதிர்வரும் காலத்தில் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வீதியில் இறக்கி போராட்டம் நடத்தப் போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியங்கா பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நாடு முழுவதிலும் தெளிவுபடுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி தொடர்ந்தும் நிறைவேற்றப்படாத நிலையில் நீடிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்னதாக தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்து அதன் ஊடாக வரவு செலவு திட்டத்தில் சம்பளத்தை அதிகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்