அதிகரிக்கும் வரிச்சுமை.. தீராத கோரிக்கைகள் - வவுனியாவில் போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்
வவுனியா - பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டுத் தீர்மானத்திற்கமைவாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது, நேற்று(30.10.2026) பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கை
பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான மற்றும் அதிகரிக்கப்பட்ட வரிச் சுமைக்கு எதிராகவும், விசேட தெரிவு பெறுபவர்களுக்கான கொடுப்பனவுகள், மாணவர்களின் பரீட்சை வினாத்தாள் திருத்துவதற்கான கொடுப்பனவுகள், மேலதிக பயணம் சம்பந்தமான கொடுப்பனவுகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட வரிச்சுமைகள் தொடர்பான கோரிக்கைகள், பல்கலைக்கழக ஆசிரியர்களின் குழந்தைகளின் முதலாம் ஆண்டு அனுமதி தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஆதரவாக அதற்கு வலுசேர்க்கும் வகையில் வவுனியாவிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இஸ்ரேலிய அரபு சிறுபான்மையினருடன் இலங்கைத் தமிழர்களை ஒப்பிட்ட மனோ கணேஷன் - அரசுக்கு விடுத்துள்ள சவால்