கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
எதிர்காலத்தில் விஞ்ஞான பீட கற்பித்தல் டிப்ளோமாவை நான்கு வருடங்களாக நீடித்து பட்டப் படிப்பாக அபிவிருத்தி செய்து டிப்ளோமா முடித்த ஆசிரியர்களுக்கு பட்டதாரியாகுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (16.06.2023) நடைபெற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் பிரதான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சிய ஆசிரியர் நியமனங்கள்
இதன்போது மேல் மாகாணங்கள் மற்றும் தேசிய பாடசாலைகள் தொடர்பான 2355 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நியமனங்கள், ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய ஆசிரியர் நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் பிற சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் தொடர்பாக கல்வித்துறைக்கு சொந்தமான பகுதியை நடைமுறைப்படுத்த தேவையான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |