அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
தேசிய பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று (29) முதல் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த தகவல் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு
கடந்த மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பான நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை இசுருபாய கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1 (அ) தரத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri