கனடாவில் பிரபல ஈழத்தமிழ் அரசியல்வாதி மரணம்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமாகி உள்ளார்.
கனடா ரொரன்ரோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலஞ்சென்றுள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 91.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவேந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றம் செல்லாமையினால் 2007 நவம்பரில் அவரது பதவி பறி போனது.
இந்நிலையில் கனடா சென்ற நிலையில் அங்கு பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். கனகேந்திரன் என்ற தனது இயற்பெயரை தூய தமிழில் ஈழவேந்தன் என மாற்றிய தமிழ் மொழிப் பற்றாளர்.
நல்லூரைச் சேர்ந்த புகையிரத நிலைய அதிபர் கனகசபாபதி அவர்களின் மகனான ஐயா யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் கல்வி பயின்றார்.
தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக சமரசமில்லாத போராளியாக இறுதி வரை செயற்பட்டிருந்தார்.