கல்வி மறுசீரமைப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ள ஆசிரியர் சங்கம்!
உத்தேச கல்வி மறுசீரமைப்பு, மாணவர்களின் சுமைகளைக் குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
மறுசீரமைப்பு அவசியம் என்றாலும், அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் 2018 ஆம் ஆண்டின் மறுசுழற்சி செய்யப்பட்ட யோசனைகள் என்றும், புதுமைகள் எவையும் இல்லாதவை என்றும் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறுசுழற்சி செய்யப்பட்ட யோசனைகள்
கல்வி நிபுணர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போன்ற முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்காமல் மறுசீரமைப்பை முன்னெடுப்பதாகவும் அவர் அரசாங்கத்தையும் விமர்சித்துள்ளார்.

பாடசாலை நேரங்களின் ஆலோசிக்கப்படாத நீடிப்பை எடுத்துக்காட்டிய அவர், நிபுணர் ஆலோசனையின் அடிப்படையில் மாணவர்களை மையமாகக் கொண்ட திட்டமிடலின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கல்விக் கட்டண அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் ஆராய்ச்சி மற்றும் உண்மையான தேவைகளின் அடிப்படையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam