நுவரெலியாவில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் போராட்டம் (VIDEO)

Nuwara Eliya Sri Lanka Economic Crisis Sri Lanka SL Protest Sri Lanka Fuel Crisis
By Thirumal Jun 21, 2022 03:55 PM GMT
Report

நுவரெலியாவில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று நுவரெலியா, ஹாவாஎலிய பெண்கள் உயர்நிலை பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலயம் முன்னெடுத்தனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் கடந்த 5 நாட்களாக எரிபொருள் இன்மையால் பாரிய சிரமத்தின் மத்தியிலேயே பணியில் ஈடுபடுவதாகவும், தமக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையிலும்,எரிபொருளை முறையாக பெற்றுக்கொள்வதில் ஆசிரியர்கள் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் போராட்டம் (VIDEO) | Teachers Struggle In Nuwara Eliya

போக்குவரத்து கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரிக்கை

ஆசிரியர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவுகள் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரியும், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த மதிப்பீட்டு பணிகளுக்காக வருகை தரும் ஆசிரியர்கள் எரிபொருள் இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால் தமக்கு சாதகமான பதில் கிடைக்க வேண்டும் என கோரியே போராட்டத்தை முன்னெடுத்ததாக போராட்டகாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நுவரெலியாவில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் போராட்டம் (VIDEO) | Teachers Struggle In Nuwara Eliya

இலங்கையில் கொரோனா அதனைத்தொடர்ந்து பொருளாதார நெருக்கடி என்று மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், க.பொ.த சாதாரன தர மாணவர்களின் எதிர்காலத்தையும் இதன்மூலம் கேள்விக்கு உட்படுத்த வேண்டாம் எனவும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேற்படி, பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக வருகை தரும் ஆரிசியர்களுக்கு உடனடியாக எரிபொருள் வழங்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கவனயீர்ப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.

நுவரெலியாவில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் போராட்டம் (VIDEO) | Teachers Struggle In Nuwara Eliya

பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகலாம்

மேற்படி பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக அதிகமான ஆசிரியர்கள் கடமைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மதிப்பீட்டுப் பணிகளுக்காக நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து வருகை தரும் ஆசிரியர்கள் எரிபொருள் நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருவதாகவும், எரிபொருளின்றி, அதிக பணத்தை செலவழித்து முச்சக்கர வண்டி மூலம் கடமைக்கு வருகை தருவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் போராட்டம் (VIDEO) | Teachers Struggle In Nuwara Eliya

இவ்வாறு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமானால் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுவதும் தாமதமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியாவில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் போராட்டம் (VIDEO) | Teachers Struggle In Nuwara Eliya

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US