கொட்டும் மழைக்கு மத்தியில் ஆசிரியர்கள் போராட்டம் (Photo)
திருகோணமலையில் அதிபர், ஆசிரியர்கள் கொட்டும் மழைக்கு மத்தியில் மாபெரும் நடைபவணியொன்றை நேற்றைய தினம் முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலை சிவன் ஆலய முன்றலிலிருந்து நடைபவணியாக திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பு நிலையம் வரை சென்றுள்ளனர்.
இதன்போது ஆசிரியர் சங்கத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் கடந்த ஆறு மாதங்களாக ஆசிரியர்கள் வீதிகளில் இறங்கி மழை, வெயில் என பாராமல் சம்பள உயர்வினை கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தயவு செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மற்றும் பஷில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) ஆகியோரிடம் நாம் கேட்டுக் கொள்வது என்னவெனில், ஆசிரியர்களை வீதிக்கு இறக்காமல் நியாயமான சம்பள கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு தீர்வினையும் வழங்க வேண்டும் என்பதே என தெரிவித்துள்ளனர்.







