வெளிமாவட்ட ஆசிரியர்களை கடமைகளைப் பொறுப்பேற்க இடமளிக்க வேண்டும்!
இடமாற்ற சபையின் ஊடாக வருடாந்த இடமாற்றங்களை பெற்ற வெளி மாவட்ட ஆசிரியர்கள் உரிய முறையில் தமது பாடசாலைகளை பொறுப்பெடுக்க அனுமதிக்காவிட்டால் வடமாகாண ஆளுநர் செயலகத்தை முடக்கி போராட்டம் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "வடக்கு மாகாண ஆசிரியர்களை மோத விடும் வடமாக ஆளுநரின் அரசியல் விளையாட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
போராட்டம் முன்னெடுப்போம்..
சேவையின் தேவை கருதி என்ற பெயரில் அரசியல் நீதியாக ஆசிரிய இடமற்றாற்றங்களை மேற்கொண்ட வட மாகாண கல்வி உயர் அதிகாரிகளுக்கும் வடமாகாண ஆளுநருக்கு சிறந்த பதிலாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்காலிக இடைநிறுத்த உத்தரவு அமைந்துள்ளது.

சேவையின் தேவை கருதிய இடமாற்றம் இடம்பெற்றால் மட்டுமே வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என வடமாகாண ஆளுநர் தெரிவித்த கருத்து ஆசிரியர்கள் மத்தியில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்தாகும்.
வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றத்தில் வருகை தர உள்ள நிலையில் சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் சுமார் 193 பேர் உள்ளடக்கப்பட்டனர்.
உண்மையில் நேர்மையான ஆளுநர் என்றால் பிரச்சனையான 193 பேருக்கு பதிலாக அதே அளவு தொகையை நிறுத்தி வைத்துக்கொண்டு ஏனையவர்களை விடுவித்திருக்க வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை” என்றார்.
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri