ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அதிலிருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாட்டின் சவாலான தொற்றுநோய் சூழ்நிலையைக் கவனத்தில் கொள்ளுமாறும், பொதுச் சுகாதாரத்தின் நன்மைக்காக வெகுஜன ஆர்ப்பாட்டங்களிலிருந்து விலகி இருக்குமாறும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார்.
"யுத்துகம" அமைப்பு எனப்படும் சிவில் சமூக அமைப்பை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிடு குமாரதுங்க இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் தனது கருத்தைத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் குமாரதுங்க,
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நீண்டகால வேதன முரண்பாடுகளைச் சரிசெய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டுள்ளது.
அரசாங்கம் குறிப்பாகத் தனது அறிக்கையில் கூட அறிவித்துள்ளது. எனவே இது பொது போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கான நேரம் அல்ல என்று அவர் கூறியுள்ளார். அரச ஊழியர்களை வழமையான கடமைகளுக்கு அழைக்கும் முடிவைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் தாமதப்படுத்தியிருக்க வேண்டும்.
இதில் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. எவ்வாறாயினும், நாட்டின் மற்றும் அதன் மக்களின் நலன்களுக்காக அனைவரும் கூட்டாக முடிவெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுகாதார ஊழியர்கள் சோர்வடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
