சொத்துக்களை குவித்து வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ
போர்த்துகல் அணியின் கால்பந்தாட்ட நட்சத்திரமான கிரிஸ்டியானோ ரொனால்டோ சொத்துக்களை குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக பில்லியனாதிபதியான கால்பந்தாட்ட வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுக்காள்கின்றார்.
உலகின் முன்னணி சஞ்சிகைகளில் ஒன்றான ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் சுட்டி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது.
உலகின் புகழ்பூத்த விளையாட்டு நட்சத்திரங்கள்
சவூதி அரேபிய கால்பந்தாட்டக் கழகமாக அல் நஸ்ர் கழகத்துடன் கடந்த ஜூன் மாதம் ரொனால்டோ இணைந்து கொண்டார். அல் நஸ்ர் கழகத்துடன் கையெழுத்திட்ட புதிய ஒப்பந்தம் — வரி விலக்கப்பட்ட நிலையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது 40 வயதான ரொனால்டோவின் மொத்த சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஜனவரியில் சவூதி ப்ரோ லீக்கில் இணைந்த ரொனால்டோ, ஆண்டு 200 மில்லியன் டாலர் சம்பளத்துடன் கால்பந்து வரலாற்றிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீரராக மாறினார்.
இது அவரை ரியல் மாட்ரிட், மாஞ்செஸ்டர் யுனைடெட், யுவென்டஸ் ஆகிய கழகங்களில் பெற்ற புகழுக்கு மேலாக உலகளாவிய நிதி வெற்றியின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
விளைாயட்டு வீரர்களில் மிகவும் விரல் விட்டு எண்ணக்கூடிய பில்லியனாதிபதிகள் பட்டியலில் ரொனால்டோ இடம்பிடித்துள்ளார்.
உலகின் புகழ்பூத்த விளையாட்டு நட்சத்திரங்களான மைக்கேல் ஜோர்டன், ரோஜர் பெடரர், டைகர் வுட்ஸ் போன்ற உலக விளையாட்டு நட்சத்திரங்களின் பில்லியன் டொலர் சொத்துடையோர் பட்டியில் ரொனால்டோவும் இணைந்து கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




