ஆசிரியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை: ரோஹினி கவிரத்ன
ஆசிரியர்களுக்கு சீருடைக்கான கொடுப்பனவு திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்ததாவது,
“மாணவர்களுக்கு சீருடை இருப்பதை போன்று ஆசிரியர்களுக்கு சீருடை கிடையாது. ஆனால், ஆசிரியர்கள் சேலையை சம்பிரதாயபூர்வமாக அணிகின்றனர்.
ஆசிரியர்களுக்கு சீருடைக்கான கொடுப்பனவு திட்டம்
நான் ஆசிரியராக இருந்தால் சேலையையே அணிவேன். ஆனால், கீழ்த்தரமான நபரொருவர், 'ஆசிரியைகள் சேலைக்கு பதிலாக வேறு உடையை அணிய அனுமதி கோருவது பாடசாலைக்கு வரும் மாணவர்களின் தந்தையர்களுடன் செல்வதற்கு இலகுவானதாக இருப்பதற்காகவே' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது அனைத்து ஆசிரியர்களையும் அவமதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை பொருளாதார ரீதியில் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றையவர்களுக்கு வழங்கப்படுவதை போன்று ஆசிரியர்களுக்கும் சீருடைக்கான கொடுப்பனவொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)