பிள்ளையான் மற்றும் வியாழேந்திரனுக்கு பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஆசிரியர் சங்கம்
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானையும் கல்வி தொடர்பாகப் பேசுவதற்காகப் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு பொதுச்செயலாளர் பொன்.உதயரூபன் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு டப் வழங்கும் செயற்றிட்டமானது நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட திட்டமெனவும், அது உலக வங்கியின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நிலையில் அதனை அரசியல் நிகழ்வாகச் செயற்படுத்தப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலவச கல்வியை வியாபாரமாக நடாத்திய வியாழேந்திரனும், பல கல்விமான்களைக் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றிய பிள்ளையானும் கல்விக்கொள்கைக்கு முரணாக இந்த டப்களை தாங்கள் வழங்குவதாகத் தெரிவித்து வரும் கருத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது வன்மையான கண்டனத்தினை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan