வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் நாளை முடக்கப்படும்! : தொண்டர் ஆசிரியர்கள் அறிவிப்பு (Video)
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நாளையதினம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் முன் இன்று கூடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று நாங்கள் வடமாகாண கல்வி செயலாளரை சந்தித்து எங்களுடைய தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் குறித்து கேட்ட போது எங்களுக்கு அப்படி ஒரு நியமனம் இல்லை என்றும் முற்று முழுதாக மறுக்கப்பட்டு விட்டது. என்ற பதிலை எங்களுக்கு அவர்கள் தந்துள்ளார்கள்.
எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், காலம் கடந்து சென்று கொண்டிருக்கின்ற நிலையில் மேலும் காலம் தாழ்த்தாமல் உரிய நியமனங்களை எங்களுக்கு வழங்குமாறு கோரியும் தொண்டர் ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.


முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam