வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரிய மாணவன் திடீரென மரணம்
வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
இன்று இரவு (16.11) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் காய்ச்சல் காரணமாக தனது விடுதியில் இருந்துள்ளார்.தனது சக ஆசிரிய மாணவர்களிடம் உணவு வாங்கி வருமாறு கூறிவிட்டு விடுதியில் உறங்கியுள்ளார்.
உணவு வாங்கிக்கொண்டு சக ஆசிரிய மாணவர்கள் அங்கு வந்த போது காய்ச்சல் காரணமாக குறித்த ஆசிரிய மாணவன் அவதிப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம்
இதனையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில், வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் விவசாய பாடப்பிரிவின் முதலாம் வருட ஆசிரிய மாணவனான மட்டக்களப்பு, காரைத்தீவினைச் சேர்ந்த ஜிந்துஜன் என்பவரே மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
