புலம்பெயர் தமிழர்களை குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது..! முன்னாள் கடற்படை பேச்சாளர் ஆதங்கம்

Human Rights Council Geneva Tamil diaspora
By Kanthan Sep 18, 2025 07:22 AM GMT
Report

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் எமக்கெதிராக புலம்பெயர் தமிழர்கள் செயற்படுவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத காரணியாகும் என முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இணையத்தள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

சரி செய்யுங்கள் இல்லையேல் பதவி விலகுங்கள்...! பிமல் விடுத்த இறுதி எச்சரிக்கை

சரி செய்யுங்கள் இல்லையேல் பதவி விலகுங்கள்...! பிமல் விடுத்த இறுதி எச்சரிக்கை

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டின் முழுமையான நோக்கம் ஐரோப்பாவின் ஆதிக்கத்தில் இலங்கையை உள்ளடக்க வேண்டும் என்பதாகும்.அதற்காக ஐரோப்பா பயன்படுத்தும் கருவியாக புலம்பெயர் தமிழர்கள் காணப்படுகிறார்கள்.

புலம்பெயர் தமிழர்களை குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது..! முன்னாள் கடற்படை பேச்சாளர் ஆதங்கம் | Geneva Human Rights Council

அதாவது இந்திய பெருங்கடலில் தங்களின் ஆதிக்கம் மேலோங்க இலங்கை ஒரு மர்மஸ்தானமாக இருப்பதாலாகும்.இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க காங்கிரஸுக்கு நிபுணர்கள் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

அது போருக்குப் பிறகு இலங்கையின் மறுசீரமைப்பு (recharcting of srilanka sfter war) ஆகும்.

அதில், இந்து சமுத்திர ஆதிக்கத்தில் இலங்கை முக்கிய புள்ளியாகும்.அதில் எமது பலத்தை நிலை நாட்ட எமக்குள்ள பலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது நாட்டில் தேசிய ஒருமைப்பாடு இல்லை என்பது பொய்யான கருத்தாகும்.யுத்தம் நிறைவடைந்த சில காலத்தில் நாம் அனைவரையும் மீள  குடியமர்த்தினோம்.

தேசிய ஒருமைப்பாடு

சிங்களவர், தமிழர் முரண்பாடுகள் ஊதி பெருப்பிக்கப்பட்டதாகும். நாட்டில் தேசிய ஒருமைப்பாடு நிலைப்பது சர்வதேச தரப்பில் விரும்பப்படாத ஒன்றாகும். அவர்களுக்கு இவை ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.எங்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி.எமக்கிருக்கும் குறைந்தளவான வளங்களையும் சூறையாடிக் கொள்வதாகும்.

அதற்காக எம்மிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும்.அப்போது எமக்கிருக்கும் வளங்களை பிரித்து கொள்வதற்கு எமது நாட்டில் நடக்கும் சண்டையில் அவர்கள் பலன் அடைவதே  நோக்கமாகும்.

புலம்பெயர் தமிழர்களை குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது..! முன்னாள் கடற்படை பேச்சாளர் ஆதங்கம் | Geneva Human Rights Council

அதாவது "Responsibility to Protect" (R2P) என்ற சாசனத்தின் படி ஒரு நாட்டுக்கு தனது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் ஐ.நாவின் பங்கேற்பில் அவர்களை பாதுகாப்பதற்காக தலையிட முடியும்.

அவ்வாறான ஒரு நிலைக்கு எமது நாட்டை கொண்டுவரவே முயற்சிக்கின்றனர். அல்லது தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவோ அல்லது புலம்பெயர் தமிழர்களின் அன்புக்காகவல்ல.

ஐரோப்பிய நாடுகளின் பிரதான குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்கே இவ்வாறான முன்னெடுப்புகள் செய்யப்படுகின்றன. இலங்கை அரசியல்வாதிகள் கூச்சலிடும் புலம் பெயர் தமிழர்கள் அல்ல.

அவர்களையும் சர்வதேசம் தங்கள் பக்கம் சார்ந்து வைத்து கொண்டே தங்களில் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ள மேற்கொள்ளும் பிரயத்தனமாகும். உங்களின் வாக்குகள் எமக்கு தேவை, உழைப்பு எங்களுக்கு முக்கியமானது என கூறும் ஐரோப்பியா தமிழர்களுக்கான தனி நாடு அவசியம் என கருத்துகள் புலம்பெயர் தமிழர்களுடாக இலங்கையில் பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகள் மற்றும் உறவினர்களுக்கு முக்கிய தகவல்

கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகள் மற்றும் உறவினர்களுக்கு முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US