யாழில் மாணவிகளை தவறான நடத்தைக்குட்படுத்திய ஆசிரியருக்கு பணித்தடை
யாழ்ப்பாணத்தில் (Jaffna) 10 வயது மாணவிகளை தவறான நடத்தைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாயிலுள்ள பாடசாலை ஒன்றில் பணிபுரியும் குறித்த ஆசிரியர், தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவிகளை தவறான நடத்தைக்குட்படுத்துவதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்மைய, ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பிணையில் விடுவிப்பு
இந்நிலையில், குறித்த ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விசாரணை அறிக்கை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆசிரியருக்கு பணியினை தொடர தடை விதிக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |