5ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக அறைந்த ஆசிரியை - சிறுமி வைத்தியசாலையில் அனுமதி
மன்னாரில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் கேட்ட கேள்விக்கு குறித்த மாணவி தவறாக பதில் கூறியமையினால் கோபமடைந்த ஆசிரியர் சிறுமியை கன்னத்தில் பலமாக அறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட சிறுமி
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது வகுப்பாசிரியர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சிறுமி தவறான பதிலளித்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த வகுப்பாசிரியர், சக மாணவர்கள் முன்னிலையில் சிறுமியின் கன்னத்தில் பலமாக பல தடவைகள் அறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியரின் இந்தத் தாக்குதலால், சிறுமியின் கன்னத்தில் காயங்கள் ஏற்பட்டு, இரத்த கண்டல்கள் காணப்பட்ட நிலையில் உடனடியாக பெற்றோர்களால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சிறுமி வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உள்ளதுடன் சிறுமியைத் தாக்கிய ஆசிரியை மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அமெரிக்கா! பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
கோட்டாபய விரட்டப்பட்டு 4 வருடங்கள் - ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடியது யார்..!
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam