போராட்டங்கள் தொடரும் : எச்சரிக்கை விடுத்துள்ள தொழிற்சங்கங்கள்
ஆசிரியர்களின் வேதனப்பிரச்சினை தொடர்பில் போராட்டங்கள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
கடந்த 12 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் (Mahinda Rajapaksa) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது அமைச்சரவையின் உபக்குழு, அனுமதி வழங்கிய தமது கொடுப்பனவுகள், நான்கு கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும் இந்த கொடுப்பனவுகள் ஒரே தடவையில் வழங்கப்பட வேண்டும் என்ற தமது கோரிக்கை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
எனினும் இது தொடர்பில், உரிய தீர்வுகள் இன்று அறிவிக்கப்படவில்லை என்று ஆசிரியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே சட்டப்படி பணிசெய்யும் நடவடிக்கை நான்காம் நாளாக முன்னெடுக்கப்படுவதாக ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் ஆசிரியர்கள் பாடசாலை கல்வியில் மாத்திரம் ஈடுபடுகின்றனர்.
ஏனைய அரச திணைக்களங்களுடன் எந்த தொடர்புகளையும் புறக்கணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை போராட்டத்தின் ஒரு கட்டமாக எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதியன்று பெற்றோர்களின் போராடங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன் இலங்கையில் உள்ள ஏனைய தொழிற்சங்களையும் இணைத்த போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கும் வகையில் சந்திப்புக்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி டெலிகொம் மற்றும் அஞ்சல் சேவை தொழிற்சங்கங்களுடன் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தொிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
