முல்லைத்தீவில் ஆசிரியரின் சைக்கிள் திருட்டு - சிசிடிவி காட்சியில் சிக்கிய நபர்
முல்லைத்தீவு - வள்ளுவர்புரம், விசுவமடு பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(08.05.2026) இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்த சைக்கிள் திருட்டு
வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 20 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri