களுத்துறை மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்: ஆசிரியருக்குப் பிணை
களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபரான தனியார் வகுப்பு ஆசிரியருக்கு வெளிநாடு செல்வதை தடை செய்து குடிவரவு குடியகழ்வுக்கட்டுப்பாட்டாளருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபரை நேற்றைய தினம் (21.07.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் தலா இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமலி ஹல்பண்தெனிய உத்தரவிட்டுள்ளார்.
பிணையில் விடுவிக்க உத்தரவு
அத்துடன், களுத்துறை வடக்கு சுபாசாதக மாவத்தையைச் சேர்ந்த 30 வயதான சந்தேகநபரை, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 12 மணிக்குள் களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரான ஆசிரியர் மாணவிகளை வகுப்பறையில் வைத்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்புணர்வு செய்ததுடன், சிறுமிகளை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவித்து களுத்துறை லாகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு தனது காரில் அழைத்துச் சென்று வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |