களுத்துறையில் 16 மாணவிகள் பாலியல் வன்புணர்வு விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குறித்த ஆசிரியர், கடந்த மே 11ஆம் திகதி களுத்துறை பிரதேச துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் பணியகத்திற்கு வந்து வாக்குமூலமொன்றை பதிவு செய்த போது கைது செய்யப்பட்டார்.
தமது கணவரின் மடிக்கணினியை ஆராய்ந்து பார்த்த போது, தனது கணவர் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக ஆசிரியரின் மனைவி களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இதன்போது குறித்த ஆசிரியர் மாணவிகளை வகுப்பறையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்ததுடன், மாணவிகளை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவித்து களுத்துறை லாகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு தனது காரில் அழைத்துச்சென்று காரில் வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்திருந்தது.
மேலும், சூம் தொழில்நுட்பம் மூலம் மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்த இணைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் இல்லாத நேரத்தில் ஆடைகளை அகற்றுமாறு அச்சுறுத்தி, அவற்றை தனது கைத்தொலைபேசியிலும் அவர் பதிவு செய்திருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் பிரிவு குற்றத்தடுப்பு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |