யாழில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் நேற்று (13.06.2023) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில் பாடசாலை அதிபரிடம் முறையிடப்பட்ட போது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.

இதையடுத்து பொலிஸாரிடம் முறையிடப்பட்ட போது ஆசிரியர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
வழக்கு தள்ளுபடி
கைதான ஆசிரியர் ஏற்கனவே வலிகாமம் பகுதி பாடசாலையொன்றில் கல்வி
கற்பிக்கும் போது சில மாணவிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், மாணவிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்வரவில்வை. இதையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீளவும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri