வவுனியாவில் ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (03.04.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் நேற்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதையடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் தனதுஆசிரியர் தாக்கியதாக தெரிவித்துள்ளான்.
இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஆசிரியர் உங்கள் மகனுக்கு கற்பித்த பாடம் தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தேன் என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் காயம் ஏற்பட்டு விட்டது என்றும் பதிலளித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு கேள்வி கேட்கும் நீங்கள் நாளையுடன் பிள்ளையை வந்து கூட்டி சென்றுவிடுங்கள் என்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி ஆசிரியர் பதில் அளித்துள்ளார்.
இதனை ஆட்சேபித்த பெற்றோர் சிறுவனை நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவனின் நெற்றியில் காயமும் கண் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைக்கும் உட்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
