யாழில் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவி வைத்தியசாலையில் அனுமதி
யாழ். வலிகாமம் வலயத்தைச் சேர்ந்த தரம் மூன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி(08) ஒருவர் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத் தாக்கியதில் மாணவி கையைத் தூக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாணவியின் நிலையை அறிந்து கொண்ட பாடசாலை நிர்வாகம் மருந்தகம் ஒன்றில் நோவுக்குரிய மருந்துகளை வாங்கிப் பூசியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
மேலும், பாடசாலை விட்டதும் மாணவி வீடு சென்ற நிலையில் எனக்கு நடந்த சம்பவத்தை வீட்டாருக்கு தெரியப்படுத்தினார்.
இந்நிலையில் தமது மகள் கையை தூக்க முடியாமல் அவதிப்படும் நிலையை அறிந்த பெற்றோர் யாழ். போதனா வைத்தியசாலையில் மகளை அனுமதித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
