ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தின் மீது தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணைப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
கிரான்திடிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9ஆம் திகதி இந்த தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இந்த நிலையிலேயே தொடர் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் மீது தீ மூட்டிய குற்றச்சாட்டில் இதுவரையில் 25 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வீட்டுக்கு பாரியளவு சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
