டுபாயில் பதுங்கியுள்ள தரங்காவின் உதவியாளர் இலங்கையில் கைது
நான்கு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பாணந்துறை, வலபால பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் சந்தேகநபரிடம் இருந்து சுமார் இரண்டு கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாணந்துறை, வலோபால பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் டுபாயில் பதுங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் தரங்காவின் முக்கிய சீடர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த குற்றத்தடுப்பு பிரிவினர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
