தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை இன்று குறையலாம் (Video)
தேநீர் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இவற்றின் விலையை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முதலாம் திகதி முதல் நடைமுறை
இன்று(01.11.2022) முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இதற்காக அத்தியாவசிய உணவு பொருட்கள், குறைவடைந்துள்ள புதிய விலையில் உணவக உரிமையாளர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.