தையிட்டி திஸ்ஸ விகாரை:நயினாதீவு விகாராதிபதிக்கு எதிராக போர் தொடுக்கும் தேரர்கள்
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் நயினாதீவு விகாராதிபதி மற்றும் சில தேரர்கள் தங்களின் தனிப்பட்ட நலன்களுக்காக இனத்தையும் மதத்தையும் காட்டிக் கொடுப்பதாக எல்லாவல மேதானந்த தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
இணையதளம் ஒன்றிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனை தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர்,
புங்குடுதீவில் 1000 தேரர்கள்
யாழ்ப்பாணம் தொடர்பில் இவர்களின் அறிக்கைகளை தங்களில் வாயில் தானா சொன்னார்களா என்பது சந்தேகமே.அதில் ஒன்று யாழ்ப்பாணத்தில் சிங்கள பௌத்தர்கள் மற்றும் பௌத்த தேரர்கள் இருக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
றுகுணு பகுதியில் வசித்த ஹரியகாலதிஸ்ஸ என்பவர் தனக்கு தானதர்மங்கள் செய்யவேண்டும் எங்கு சிங்கள பௌத்த தேரர்கள் அதிகம் வசிக்கிறார்கள் என வினவியபோது, அந்த காலத்தில் றுகுணு பகுதியில் (தென் பகுதியில்) வெளிவந்த தகவல்களின் படி பூங்குதிவயினயில் (புங்குடுதீவில்) 1000க்கு மேற்பட்ட தேரர்கள் வசிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து அங்கு சென்ற அவர் பல தானதர்மங்களை செய்து படகு சேவையையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.இது தொடர்பான தகவல்கள் எமது பாலி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் 1000 தேரர்கள் இருந்திருந்தால் அவர்களை பராமரிப்பதற்கான மக்களும் இருந்திருக்க வேண்டும்.அதனால் யாழ்ப்பாணத்தில் பௌத்த சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான நிறைய ஆதாரங்களை எனக்கு சொல்ல முடியும்.
எந்த சாட்சியங்களை கொண்டு சிங்கள பௌத்தர்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை என தெரிவித்தார்கள் என தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.