வரி இலக்கத்தை பெறுவதற்காக மாத்திரம் பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சி
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய, வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறுவதற்காக மட்டும் பதிவு செய்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வரிக் கோப்புகளை தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் திறந்துள்ளது.
இவ்வாறு திறக்கப்பட்ட கோப்புகளில் உள்ளவர்கள் உடனடியாக வரி செலுத்துமாறு திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த குழுவில் ஏற்கனவே சம்பளத்தில் இருந்து வரி செலுத்துபவர்களும், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்களும் வேறு எந்த வருமானமும் பெறாதவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
வரிக் கோப்பு
வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பதிவு செய்துள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான வரிக் கோப்புகளைத் தங்கள் வரி இலக்குகளை அடைவதற்காக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் திறந்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது வரி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டு வரி செலுத்துவோர் அடையாள எண்ணில் பதிவு செய்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வரிக் கோப்புகள் திறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வரி அடையாள எண்
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி செலுத்துவோரை அடையாளம் காண மட்டுமே வரி செலுத்துவோர் அடையாள எண் வழங்கப்படும் என இறைவரி திணைக்களம் அறிவித்திருந்தது.
மேலும், இந்த இலக்கம் பெற்ற அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இலக்கம் பெற்ற அனைவருக்கும் உரிய வரிகளை செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடிதங்கள் மற்றும் குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |