தமிழர் பகுதியை அச்சுறுத்தும் கடத்தல்! செய்திகளின் தொகுப்பு
மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறும் நிலையில், பாடசாலைகளுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதுடன் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த இரு சிறுவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபர், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் மன்னார் பொலிஸார், இரானுவத்தினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று (09.05.2023) மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதுடன் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,