படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மனின் நினைவேந்தல்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம்(Jaffna) - வடமராட்சியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களான தராகி சிவராமின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், செல்வராசா ரஜிவர்மனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் யாழ். வடமராட்சி ஊடக அமையத்தில் இன்று (28.04.2024) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
ஊடகவியலாளர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு - பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட பின்னர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகில் அவரது சடலம் மீட்கப்பட்டிருந்தது.
ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் யாழ். ஸ்டான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நினைவேந்தல் நிகழ்வில் பொது சுடரினை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராசா ரஜிவர்மனின் தாயார் ஏற்றி வைக்க , தராகி சிவராமின் திருவுருவ படத்திற்கான மலர் மாலையினை யாழ். பல்கலைக்கழக பீடாதிபதி ரகுராம் அணிவித்துள்ளார்.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராக்கி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மெழுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும் அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழ ஊடக துறை விரிவுரையாாளர் ரகுராம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராாசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் , முன்னாாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் ,ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு
படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் டி.சிவராம் அவர்களின் 19ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் நேற்று மாலை (28.04.2024) மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இலங்கை இணைய ஊடக அமைப்பின் ஏற்பாட்டானர் பெடிகமகே, மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கலந்து கொண்டுள்ளனர்.


















ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
