ஊடகவியலாளர் மாமனிதர் "தராகி" சிவராமின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்
ஊடகவியலாளர் மாமனிதர் "தராகி" சிவராமின் 20 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் கணபதிப்பிள்ளை குமணன் தலைமையில் இடம்பெற்று குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அஞ்சலி நிகழ்வு
குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர் சிவராமின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சோமிதரனின் தராக்கி ஆவணப்பட திரையிலும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
வடமராட்சி ஊடக இல்லம்
மேலும், ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும், இலங்கையில் இடம்பெற்ற சகல ஊடகவியலாளர் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படுவதன் மூலம் நீதியை நிலைநாட்ட புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் என யாழ். வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி நிற்கின்றது என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
யாழ்ப்பாணம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் ஊடக அமையம், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் - பிரதான வீதியில் அமைந்துள்ள, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியில் தராகி சிவராமின் நினைவேந்தல் இடம்பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







