ரஷ்யாவிற்கு எதிரான ஜேர்மனியின் புதிய நகர்வு: உக்ரைனுக்கு வலுக்கும் ஆதரவு
ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட "Leopard 1" டாங்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் குறித்து உக்ரைன் வீரர்களுக்கு ஜேர்மன் தரப்பில் பயிற்சி அளிக்கப்பட்டுவரும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இந்த விடயமானது ரஷ்ய தரப்புக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜேர்மனியின் பயிற்சியின் நோக்கம், உக்ரைனிய துருப்புக்களுக்கு ஜேர்மன் வழங்கிய ஆயுதங்களை இராணுவ நடவடிக்கைகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தேர்ச்சி பெற அனுமதிப்பதாகும்.
உக்ரைனியர்களுக்கு பயிற்சி

கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜேர்மன் படைகள் 6,000 உக்ரைனியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நேற்றையதினம்(18.08.2023), ஜேர்மனியின் கிழக்கு மாநிலமான சாக்சோனி-அன்ஹால்ட்டில் உள்ள பயிற்சி மைதானத்தில் "Leopard 1" டாங்கிகளைப் பார்க்க ஜேர்மனிய ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன் பின்னணியில் 100 "Leopard 1" டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாக ஜேர்மன் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 16 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri