தமிழர்களுக்கு உள்ள ஒரே ஒரு பலம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தமிழர்களுக்கு உள்ள ஒரே ஒரு பலம் வாக்குபலம் என்பதை நிரூபிக்க வேண்டுமாயின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமித்த முடிவுகளை எடுக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (20.05.2024) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் எங்களை ஏமாற்றியது. நாங்கள் நலினமடையப்பட்டு அனைத்தையும் இழந்துள்ளோம்.
பொலிஸார் அடாவடி
எனவே, எமக்கு உள்ள ஒரே ஒரு பலம் வாக்குபலம் என்பதை நிரூபிக்க வேண்டுமாயின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமித்த முடிவுகளை எடுக்கவேண்டும்.
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக மிகவும் நீண்டகாலமாக பல முயற்சிகளை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல கட்சிகள், தனிநபர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன் பிகாரமாக
முள்ளிவாய்காலுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை செயலாளர் நாயகம் வந்து அஞ்சலி
செலுத்தியமை சர்வதேசத்தின் பால் ஈர்ந்தவர்களுக்கு வெற்றியாகும் என்பதோடு இதற்கு நன்றியும் தெரிவிக்கின்றோம்.
அத்துடன், முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடந்து கொண்ட முறை ஏற்புடையதல்ல.
எந்த மனித நாகரிகத்தை ஏற்றுக் கொண்டவர்களும் அவர்களுடைய
செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட துயரமான சம்பங்களை
வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஜனாதிபதி பொது வேட்பாளர்
மேலும், ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பாக வடக்கு கிழக்கில் பல கருத்துக்கள் உலாவிவருகின்றது.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் தமிழர்களுக்காக இருந்த ஒரு தனிமனித சுதந்திரமானது வாக்களிக்கும் உரிமையாகும்.
ஒரு தனிமனிதன் தனது உரிமையான வாக்கினையளித்து ஒருவரை வெற்றி பெறவைப்பதற்கும் தோல்வியடைய வைப்பதற்கும் அவனின் சிறப்புரிமையை எவராலும் மறுக்க முடியாது.
ஒற்றுமையே எமது பலம் என்பதை நிரூபிக்க வேண்டுமாயின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றமையாக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமித்த முடிவுகளை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |