யாழில் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்ப பிரிவு பாடசாலை மீள்திறந்து வைப்பு

Douglas Devananda Sri Lankan Schools
By Kajinthan May 20, 2024 01:19 PM GMT
Report

யாழில் (Jaffna) நீண்டகாலமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டுவில் ஸ்கந்தவரோதயா பாடசாலையின் ஆரம்ப பிரிவு, கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது, இன்று (20.05.2024) காலை இடம்பெற்றுள்ளது. 

கடந்த மாதம் 12ஆம் திகதி குறித்த பாடசாலை சமூகத்தினரின் வேண்டுதலுக்கிணங்க களவிஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினத்திலிருந்து (மே 20)  யா/மட்டுவில் ஸ்கந்தவரோதயா மகாவித்தியாலயத்தில் ஆரம்பபிரிவு வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

ஈரான் ஜனாதிபதியின் உலங்குவானூர்தி விபத்தின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட்?

ஈரான் ஜனாதிபதியின் உலங்குவானூர்தி விபத்தின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட்?

அமைச்சரின் நடவடிக்கை 

இதனடிப்டையிலேயே, இன்று குறித்த பாடசாலையின் ஆரம்ப பிரிவு இன்று சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

primary-school-in-batticaloa-douglas-opened-

யாழில் 150ஆவது வருடத்தை நெருங்கும் வரலாற்றை கொண்ட பாடசாலைகளுள் ஒன்றான யா/ மட்டுவில் மகாவித்தியாலயத்தில் முன்னதாக தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையிலான வகுப்புக்கள் இருந்து வந்துள்ளன.

ஆனால், சில வருடங்களாக பல காரணங்களால் இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு வகுப்புக்கள் அதிகாரிகளால் இடைநிறுத்தப் பட்டிருந்தன.

இதையடுத்து, குறித்த பகுதி கல்வி சமூகத்தினர், நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் தமது பாடசாலையில் ஆரம்ப வகுப்புக்களை இடைநிறுத்தியமைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் அவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தால்..! ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ள விடயம்

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தால்..! ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ள விடயம்

மீள ஆரம்பிப்பு 

இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக துறைசார் தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று ஆரம்ப பிரிவு வகுப்புக்களை மீள முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

primary-school-in-batticaloa-douglas-opened-

இதையடுத்து, இன்றையதினம் மட்டுவில் ஸ்கந்தவிரோதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பிரதேச கல்விச் சமூகம் மற்றும் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த சமூக அக்கறையை பாராட்டி கௌரவித்துள்ளதுடன் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் கடலட்டை பண்ணையாளர்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கிய டக்ளஸ்

கிளிநொச்சியில் கடலட்டை பண்ணையாளர்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கிய டக்ளஸ்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US