அரசியலுரிமை நிறைவேற்றத்திற்கான நகர்வுக்கு காத்திருக்கும் தமிழ் மக்கள்
நடைபெறவுள்ள தேர்தலிலும் தங்களுடைய அரசியலுரிமை நிறைவேற்றத்திற்கான ஆக்ரோசத்தினை தமிழ் மக்கள் வெளிப்படுத்துவார்கள் என்பது திண்ணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின களுவன்கேணி பிரதேசத்தில் நேற்று(18.10.2024) நடைபெற்ற மக்கள் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
பறிக்கப்பட்ட உரிமை
“தமிழர்களாகிய நாம் மறுக்கப்பட்ட, பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகவே தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம்.

ஒரு இனமாக நம்முடைய உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்வதற்குப் போராடுவதற்கு எமக்கு அத்தனை உரிமைகளும் இருக்கின்றன.
நம்முடைய போராட்டத்தினை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. ஜே.வி.பி. யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது.
நாட்டில் மாற்றம்
இத்தேர்தலானது ஒரு முக்கியத்துவம் மிக்கதொரு தேர்தலாகும். நாட்டில் மாற்றம் ஒன்று தேவை என்ற கோசத்தின் அடிப்படையிலேயே இந்தத் தேர்தலுக்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த மாற்றம் அமையவுள்ள நாடாளுமன்றத்தினாலேயே நிர்ணயிக்கப்படும். அதே நேரத்தில் தமிழர்களின் உரிமைகளை கேள்விக்கும் வகையில் செயற்படுவதற்கும், அதிகாரத்துவத்துக்கும், அடக்குமுறைகளுக்கும் மக்களது உரிமைகளை அடகு வைப்பதற்கு எந்தத் தமிழ்க் கட்சிக்கும் அதிகாரமில்லை என்பதனையும் மறுத்தலாகாது” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam