இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அதிகாரிகள்
இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் மீட்க முடியாத நிலையில் உள்ள இந்திய மீன்பிடி படகுகளை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளை இறுதி செய்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று இதனை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ கோபால் பாக்லே மற்றும் தமிழக அரசின் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இது தொடர்பான முடிவு அறிவிக்கப்பட்டது.
2021 நவம்பர் 21 ஆம் திகதி முதல் 24 வரையான காலத்தில் ஸ்ரீ கோபால் பாக்லே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பயணம் செய்தார்.
உயர் ஸ்தானிகர், தமிழக முதலமைச்சர் .மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள்-மக்கள் உறவுகள் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து அவருக்கும், தமிழகத்தின் உயர் அதிகாரிகளுக்கும் விளக்கமளித்தார்.
தனது பயணத்தின் முதல் நாளில், உயர்ஸ்தானிகர் ராமேஸ்வரம் கடற்கரை நகரத்திற்கு சென்று இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உள்ளூர் மீனவ மக்களுடன் கலந்துரையாடினார்.
அத்துடன் உயர்ஸ்தானிகர் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கை புனர்வாழ்வு முகாமுக்கும் சென்று அங்கு தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளிடம் கலந்துரையாடினார்.


உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
