தமிழக தேர்தலில் வரலாற்றுச் சாதனை.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய மாற்றம்!
புதிய இணைப்பு
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 84 (84.29 வீதம்) சதவீதத்தைக் கடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், சில வாக்குச்சாவடிகளில் டோக்கன் வழங்கப்பட்டு இன்னும் வாக்குப்பதிவு தொடர்வதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
தமிழ்நாட்டு வரலாற்றில், 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக பதிவுசெய்யப்பட்ட 78.2 வீத வாக்குப்பதிவுகளை முறியடித்து இந்த தேர்தலில் 84வீதத்தை கடந்த வாக்குகள் தற்போது வரை பதிவாகியுள்ளன.
2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், தேர்தலில் தற்போதைய நிலவரப்படி 84வீதத்தை கடந்த வாக்குப்பதிவு செய்யப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
இதுவரை இல்லாத வகையில்..
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாதவகையில் 80 வீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவுகள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், குறித்த நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குள் சென்றவர்கள் வாக்களித்து முடிப்பதற்கு இரவு 8 மணி வரை நேரம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில், வாக்குப்பதிவு வீதம் இன்னும் அதிகரிக்கலாம் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
கரூரில் அதிக வாக்குப்பதிவு..
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில், 30 மாவட்டங்களில் 80 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

எட்டு மாவட்டங்களைத் தவிர, மீதமுள்ள 30 மாவட்டங்களிலும் 80 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட மேற்கு மாவட்டங்களில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 89 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில், 12 தொகுதிகளில் 80 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டு வரலாற்றில் இத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளமை சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்ற தேர்தல்! 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி - வாக்களித்த சற்றுநேரத்திலேயே அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்
you may like this
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam