தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தில் அலுவலகத்தில் நேற்று(28.03.2026) இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஆகியோரும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் இணைத் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.ரவீந்திரா (வேந்தன்), முருகேசு சந்திரகுமார், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ஆகியோரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதன்போது, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
