தமிழரசு - 'சங்கு' அணி யாழில் திடீர் சந்திப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலானது இன்று(19.07.2026) தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் நடைப்பெற்றுள்ளது.
இலங்கை அரசியல் நிலவரங்கள்
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார், சி.வேந்தன் மற்றும் நா.இரட்ணலிங்கம் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, நாட்டின் சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது என சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.





பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri