தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதா அரசு..! முஜிபுர் ரஹ்மான் எம்.பி கடும் சாடல்
தேசிய மக்கள் சக்தி அரசு, தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டுச் செயற்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசமைப்பை உருவாக்குதல்
அந்த அறிக்கையில்,
எதிர்க்கட்சியாக இருந்தபோது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் மற்றும் புதிய அரசமைப்பை உருவாக்குதல் ஆகியவையே தேசிய மக்கள் சக்தியின் பிரதான நிலைப்பாடுகளாக இருந்தன. இது குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் அந்தக் கட்சியினர் முன்வைத்து வந்தனர்.

இருப்பினும், இன்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் அல்லது புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து அரசு எந்தவிதக் கருத்துகளையும் முன்வைப்பதில்லை. இது தொடர்பான கலந்துரையாடல்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
அன்று நடைமுறையிலிருந்த அரசமைப்பைக் கடுமையாக விமர்சித்த தேசிய மக்கள் சக்தியினர், இன்று அதே அரசமைப்பையே பின்பற்றி ஆட்சி நடத்தி வருகின்றனர்.
அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான அரசியல் மறுசீரமைப்பை முற்றிலும் கைவிட்டுள்ளதுடன், அதன் செயற்பாடுகளில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri