சூடு பிடிக்கும் தமிழரசு கட்சியின் தேர்தல் களம்.. எண்ணப்படும் வாக்குகள்
புதிய இணைப்பு
தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 296 பேர் தேர்தல் களத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு கட்சியின் மகளிர் அணியின் செயலாளர், உப செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது வாக்களிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் எமது செய்தியாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பிற்கான ஆரம்ப கட்ட ஆயத்தங்கள் சூடுபிடித்து வருகிறதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21.01.2024) நடைபெறும் குறித்த தேர்தலின் வேட்பாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் திருகோணமலை நகரசபை மண்டபத்திற்கு வருகை தந்துள்ளனர்.
  
அதேவேளை, சில கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற காரணத்தினால் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையால், தேர்தல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
வரலாற்றில் முதல் தடவை
அத்துடன், புதிய தலைவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தமிழரசுக் கட்சி அண்மையில் தீர்மானித்திருந்தது.  
மேலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
மேலதிக தகவல்கள் - குமார் மற்றும் சசிகரன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 









                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam