ஆடியில் ஒரு செய்தி! அதுதான் பிரான்ஸ் 'தமிழர் விளையாட்டு விழா'
ஆடி அறுவடை, ஆடித்தள்ளுபடி, ஆடிக்கூழ் என ஆடிக்கே தனிச்சிறப்பு இருந்தும் ஆடி வடுவும் நெஞ்சினில் கனமாக என்றும்...!!!
பிரான்ஸ் நாட்டில் 1998ம் ஆண்டு பிரான்ஸ் வாழ் உறவுகள் ஒன்றாய் கூடி எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, உணவு உண்டு மகிழ்ந்து தாயக உறவுகளுக்கும் உதவும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட தமிழர் பண்பாட்டு விழா 23வது ஆண்டில் 24.07.2022 ஞாயிறு மிகவும் கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகள் கோவிட் முடக்கத்தின் பின் வர்த்தகப் பெருமக்களின் பேராதரவுடன், லங்காசிறி ஊடக வலையமைப்பின் ஊடக அனுசரணையுடன் கோடை விடுமுறையை குதூகலமாய் கொண்டாட மலிவு விலைக் கடைகள், கலைநிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள் (கயிறிழுத்தல், முட்டியுடைத்தல், கலையணைச்சண்டை...) சிறுவர்கள் பெரியவர்களுக்கான சனரஞ்சக விளையாட்டுக்கள் இன்னும் வேடிக்கை வினோத நிகழ்வுகளுடன் தாயக உணவுகளும் தயார்.
சிறப்பு நிகழ்வாக தாயகக் கலைஞர்களின் « வரலாற்றை நினை வளையாது பனை » கவியரங்கம்
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்