கிளிநொச்சியில் தேர்தல் களமிறங்கும் தமிழர் விடுதலை கூட்டணி
தமிழர் விடுதலைக் கூட்டணியானது வடக்கு - கிழக்கிற்கு அப்பால் தெற்கிலும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று (10.10.2024) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் தெரிவு
வடக்கு - கிழக்கு மற்றும் மலையக பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.
இந்நிலையில், கடந்த 75 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆட்சி அமைப்புக்கு மாறாக கிராமிய மட்டத்திலிருந்து ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
அதேபோல, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சரியான நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகின்றேன் என மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
