யாழில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள தமிழரசுக்கட்சி
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர்.
இதேவேளை, வன்னி, அம்பாறை மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு இறுதியாகிவிட்டது என்றும், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு இன்னமும் நிறைவுபெறவில்லை என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சுயேட்சையாக களமிறங்கவுள்ள மூத்த உறுப்பினர்கள்
இதேவேளை, திட்டமிடப்பட்ட தனிநபர் அராஜகத்திற்கு எதிராக போரிடுவதன் அடையாளமாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் அரசு கட்சி என்ற பெயரில் சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியை உடைப்பதற்காக திட்டமிடப்பட்டு உள்ளே அனுப்பப்பட்ட நபர் வெற்றிகரமாக கூட்டமைப்பை உடைத்து, பின்பு தமிழரசுக் கட்சியையும் கைப்பற்றி விண்ணப்பம் கூட அனுப்பாதவர்களை வேட்பாளராக நியமித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதன் காரணமாக, அக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சியை அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
U0Y0CS3
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |