கனடாவில் ஒரே இரவில் கோடீஸ்வரரான அரவிந்த்! (PHOTOS)
கனடாவில் ஒரே இரவில் இளைஞரொருவர் கோடீஸ்வரரான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
ஒன்றாறியோவின் பர்லிங்டன் நகரை சேர்ந்த அரவிந்த ராகேஷ் கஸ்தூரி எனும் 33 வயதுடைய இளைஞரே இவ்வாறு ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார்.
குறித்த இளைஞர் சமீபத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அதிகாலை 4.30 மணிக்கு மின்னஞ்சலொன்று வந்துள்ளது.
அதில் லொடோ 6/49 லொட்டரி குலுக்கலில் ரூ 1,58,95,464.02 (இலங்கை மதிப்பில்) பரிசு விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கஸ்தூரி கூறுகையில்,
அதிகாலையில் தூக்கத்தின் போது பொதுவாக யாருடைய மூளையும் சிறப்பாக வேலை செய்யாது என சொல்வார்கள். அது போல தான் எனக்கு மின்னஞ்சல் வந்த போது நான் கனவு காண்கிறேனா இல்லையா என எனக்கு சரியாக தெரியவில்லை. அதனால் நான் என் போனை அப்படியே தூரமாக தூக்கி வைத்துவிட்டேன்.
அடுத்த நாள் அதை பார்த்த போது எனக்கு வார்த்தையே வரவில்லை, அதிர்ச்சியாகி விட்டேன். ஏனெனில் மிகப்பெரிய பரிசு விழுந்தது என்பதை தெளிவாக பார்த்தேன்.
என் மனைவியும் இதை முதலில் நம்பவில்லை, சரியாக பார்த்து உறுதிப்படுத்த சொன்னார். பரிசு பணத்தில் புதிய வீடு வாங்கவுள்ளேன், என் வாழ்வில் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலியாக நான் இதுவரையில் இருந்ததில்லை எனவும் கூறியுள்ளார்.