கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது!
கனடா - ரொரோண்டோவில் தமிழ் இளைஞர் ஒருவர் பெருமளவு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 26 வயதான ருக்ஷான் அருள்ராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வாடகை கார் ஓட்டுநனர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞரை கைது செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
ருக்ஷான் அருள்ராஜா மீது தடை செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை, கொக்கெய்ன் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
